சௌந்தர்யா – தனுஷ் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நாயகி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மிக விரைவில் ஒரு படத்தை இயக்க போகிறார். இப்படத்தில் தனுஷ் நடிக்க வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில் படத்தின் நாயகியாக யாரை போடலாம் என்று யோசித்த போது பாலிவுட் நாயகி சோனம் கபூர் சௌந்தர்யாவின் நினைவுக்கு வந்தது. ஏற்கனவே ரஞ்சனாவில் தனுஷுடன் சோனம் நடித்துள்ளார் என்பதால் படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்புகிறாராம் சௌந்தர்யா.
விரைவில் சோனம் கபூரை சந்தித்து கதை செல்லவுள்ளார். இப்படம் ஒரு தற்காப்பு கலை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார்.