சோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் உள்ளுரில் சோள உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ சோளத்தின் விலை 43 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சோள உற்பத்திக்காக விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 50 வீதத்தை செலவிடுகின்றனர்.
ஏற்கனவே சோள விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அதிக உற்பத்தியை வழங்கக் கூடிய முறைமை குறித்து விவசாய திணைக்கள அதிகாரிகள் விசேட திட்டங்களை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, அத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சலுகை விலையில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.