சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ராணுவம் எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கூடாது என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 27-ம் தேதி ராணுவ வாகனம் மீது சில இளைஞர்கள் கல்வீசி தாக்கினர்.இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 அப்பாவிகள் பலியாயாயினர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சோபியான் துப்பாக்கிச்சூடு குறித்து ராணுவம் தனது உள் விசாரணையை நேற்றுதுவக்கியது. இதற்கிடையே காஷ்மீர் போலீசார் ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர்.
இதற்கு போட்டியாக ராணுவமும் காஷ்மீர் போலீசார் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர். இதற்கு முதல்வர் மெகபூபா கண்டனம் தெரிவித்தார்.
நேற்று காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்து பேசியது, காஷ்மீர் போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்த மறுநாளே ராணுவம் போலீஸ் நிலையத்தில் சோபியான் துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை அளித்துள்ளது.
இதனால் காஷ்மீர் போலீசாருக்கு எதிராக ராணுவம் எந்த எப்.ஐ.ஆர்.பதிவும் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய நிலையில் காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர வேண்டும் என்றார்.