அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் எம்டபுள்யூசி – 2018 நிகழ்ச்சியில் சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சாம்சங், ஆப்பிள் போன்ற ஸ்மாட் போன்களுக்கு போட்டியாக இந்த சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மாட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் 2 ஸ்மாட்போன் மாடல் 18.9 என்ற திரைவிகிதம் மற்றும் 5.7 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஸ்மாட்போன் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.இதன் கிளாஷ் 3டி கிளாஷாக அமைந்துள்ளது. அத்துடன் நான்கு வண்ண மாறுபாடுகளை கொண்டுள்ளது. கறுப்பு, பசுமை, வெள்ளி மற்றும் பிங்க் நிறங்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் கமராவை பொறுத்தவரை 19எம்பி ரியா கமரா வசதியை கொண்டுள்ளது. இதன் பின்பு 4கே வீடியோ பதிவு மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற உள்ளன.
மேலும் இந்த புதிய மாடலில் 3180எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.