எம்மில் பலருக்கும் வயது வித்தியாசமின்றி, பாலின வேறுபாடின்றி சொரியாசிஸ் என்ற பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் பலரும் இதற்கான சிகிச்சை பெறும்போது மருத்துவர்களிடம், ‘சொரியாசிஸ் ஒரு தொற்று பாதிப்புள்ள நோயா?’ என கேட்பர். இதற்கு மருத்துவர்கள்,’ சொரியாசிஸ் தொற்றுநோயல்ல’ என பதிலளிப்பர்.
சொரியாசிஸ் என்ற பாதிப்பு, எம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களால் உண்டாகிறது என குறிப்பிடலாம். இதனை ஆங்கிலத்தில் ஒட்டோஇம்யூன் டிசீஸ் ( Autoimmune Disey) என குறிப்பிடுவார்கள். அதாவது எம்முடைய உடலிலுள்ள ஆரோக்கியமான செல்களையும், திசுக்களையும், எம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் தாக்குகிறது என பொருள். அந்த வகையில் எம்முடைய உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோயெதிர்ப்பு மண்டலம், தோல் மீது நடத்தும் தாக்குதலே சொரியாசிஸ் என்ற பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம்.
இதற்கு மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கி, இதன் பாதிப்பை கட்டுப்படுத்துவர். ஆனால் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஒரு போதும் ஸ்டீராய்டு மருந்துகளை நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் ஸ்டீராய்டு மருந்துகள் பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை. அத்துடன் ரத்த சர்க்கரையின் அளவில் சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இத்தகைய மருந்தினை பயன்படுத்தும்போது மருத்துவரின் அறிவுரையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
டொக்டர் சிவபிரகாஷ்
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]