சொத்துக்களை விற்று ஓய்வு கால நிதியை பெறும் கனேடிய மக்கள்!
கனடாவில் தொழில் புரியும் 20 சதவீதமானவர்கள் தமது வீடு, வேறு சொத்துக்கள் அல்லது தமது செலவுகளை குறைப்பதன் மூலம் தமக்கான ஓய்வுகால நிதியினைப் பெற்றுக்கொள்கின்ற விடயம் தெரிய வந்துள்ளது. கனேடிய மக்கள் தமது முதுமைக்காலத்திற்கு தேவையான சேமிப்புக்களை மேற்கொள்வது தொடர்பில் நடாத்தப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
குறித்த ஆய்வின் முடிவில் வேலை செய்யும் வயதில் உள்ள கனேடியர்களில் சுமார் அரைப்பங்கினர் தமது முதுமைக் காலத்திற்கு தேவையான சேமிப்புக்களை மேற்கொள்வதில்லை என தெரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அங்கு தொழில் புரிபவர்களில் சுமார் அரைவாசிப் பேர் இதுவரை தமது ஓய்வுகால சேமிப்பை ஆரம்பிக்கவில்லை. இதன் காரணமாகவே அங்குள்ளவர்கள் ஓய்வுகால நிதியினை பெறுவதற்காக தமது வீடு, வேறு சொத்துக்கள் என்பவற்றை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான நிலைமை காணப்பட்டாலும், தமது செலவுகளை குறைப்பதன்மூலம் நிதியினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் விடயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என அந்நாட்டின் சமூக ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.