மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்குவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி நாளை கொழும்பில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
‘மாணவ மக்கள் சக்தி அரங்கம்’ என்ற பெயரில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்படும் என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
காலியில் ஆரம்பிக்கப்படும் பேரணியைத் தொடர்ந்து மாவட்டங்கள் தோறும் இந்தப் பேரணி தொடர்ச்சியாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றியம் தெரிவித்துள்ளது.