இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
இதில் 76 ரன்களில் தொடங்கிய விராட் கோலி தனது 17-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
136 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 103 ரன்களுடன் கோலி நாட் அவுட்டாக இருக்க ரஹானே 18 பந்துகளில் 23 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 240 ரன்களை எட்டியது, விராட் கோலி டிக்ளேர் செய்தார்.
இதனையடுத்து 550 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்து தோல்வி அடைந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 97 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அஷ்வின், ஜடேஜ தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.
முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்தியாவின் ஷிகர் தவான் 190 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.