செவ்வாய் கிரகத்தின் வியத்தகு புகைப்படங்களை வெளியிட்டது நாசா
இந் நிறுவனம் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) எனப்படும் விண்கலத்தினை விண்ணில் செலுத்தியிருந்தது.
தற்போது பூமியிலிருந்து 170 கிலோ மீற்றர்கள் தூரத்தில் நிலைகொண்டிருக்கும் அவ் விண்கலத்தினாலாயே குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வழமையாக எடுக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் பொதுவாக நெருப்பின் நிறத்திலேயே காணப்படும்.
ஆனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மென்மையான பல வர்ணங்களில் காணப்படுவதுடன் பழ பழப்பான தோற்றத்தையும் கொண்டுள்ளன.
இதற்கு செவ்வாய் கிரகத்தில் காணப்படும் Nitric Oxide (NO) வாயுவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டதும் இவ்வாறு பழ பழப்பான தோற்றத்தில் தென்படுவதற்கு மற்றொரு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.