சீனாவின் ( Zhurong ) ஸீஹூரோங் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காகவே குறித்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
மேலும், 6 சக்கரங்களைக் கொண்ட ரோவருடனான இந்த விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது. தற்போது செவ்வாய்கிரகத்தில் இந்த ஸீஹூரோங் ரோவர் விணகலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்யவும். இந்த ஸீஹூரோங் ரோவர், மொத்தம் 240 கிலோ எடையுடையதாகவும், செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கெமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.