சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்ததில் சிறுவனின் கண்பார்வை பறிபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Guangxi மாகாணத்தில் கடந்த 31-ஆம் திகதி சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்ஃபோன் வெடித்ததில் 12-வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.
செல்ஃபோன் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் குடும்பத்தார், காயம்பட்ட சிறுவனை சிறிது நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட Meng Jisu என்னும் சிறுவனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, சிறுவனின் ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டு, வலது கண் பார்வையும் இழந்துவிட்டான்.
ஆனால் சிறுவனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என சிறுவனின் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெடித்து சிதறிய Hua Tang என்னும் சீன நிறுவன செல்ஃபோனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் வாங்கியதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சார்ஜ் ஏறும்பொழுது செல்ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி பல ஆராய்ச்சியாளர்கள் அறிவுறித்தியும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.