செல்போனுக்காக சகோதரியுடன் சண்டையிட்ட மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிநாட்டில் நடந்தது அல்ல… இந்திய தலைநகரான டில்லியில்தான்.
டில்லி பிண்டாபூர் பகுதியில் உள்ள மடியாலா பகுதியில் வசிப்பவர் ரன்பீர் சிங். இவர் மகன் குல்;ஷன் ஷெராவத். வயது 17. தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவருக்கும் சகோதரிக்கும் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக தினமும் தகராறு நடப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை இரவும் இதுபோல் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த குல்ஷன், செல்போனை தரையில் வீசி அடித்து உடைத்துவிட்டு வெளி யே சென்று விட்டார். நேற்று காலைதான் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முற்பகல், குல்ஷன், நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைப் பார்த்து பதறிய பெற்றோர், டனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றனர்.
குல்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் அன்டோ அல்போன்சா கூறும்போது, “மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தோம். சிறுவனின் தந்தை ரன்பீர் சிங் தனது மகன் குல்ஷன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். குல்ஷன் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியும், சட்டை பையில் இருந்த பயன்படுத்தப்படாத 4 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ன” என்றார்.
செல்போனுக்காக சகோதரியுடன் சண்டையிட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.