லண்டனின் விலங்குத் தோட்டத்தில் கதை சொல்ல முயன்ற நிருபருக்குக் காத்திருந்தது சோதனை.
விலங்குத் தோட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் நிருபர் அலெக்ஸ் டன்லப்.
அப்போது திடீரெனச் சில லெமுர்கள் அவர் மீது தாவி ஏறின. அப்போதும் நிதானமாக இருந்த நிருபருக்குச் சில கடிகளும் கிடைத்தன.
நிருபரின் கைகளில் இருந்த கொறி உணவுக்காகவே அந்த விலங்குகள் அப்படி நடந்துகொண்டன போலும்!
மடகாஸ்கரைப் பூர்வீகமாகக் கொண்ட லெமுர்கள் பெரும்பாலான வேளைகளில் ஆபத்தானவை அல்ல எனக் கருதப்படுகிறது.
படபிடிப்பில் எந்த லெமுரும் பாதிக்கப்படவில்லை என்று நிருபர் அலெக்ஸ் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.