500 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் ஹீரோ ஆதியை ஒரு தலையாக காதலிக்கும் உமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் ஜெனிபர். இவரது துறுதுறு நடிப்புக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
ஜெனிபர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே சரவணன் என்ற பொறியியல் பட்டதாரியை காதலித்து வந்தார். திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்திருந்தாலும் செம்பருத்தி சீரியல் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்களாம்.
ஆனால் கடந்த மாதம் 25ந் தேதி சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த தகவலை ஜெனிபர் தற்போது வெளியிட்டுள்ளார்.