குறுகிய மனப்பாங்கு கொண்டு எமது வளர்ச்சிமீதும் பயணங்கள்மீதும் இடையூறுகளை விளைவிப்பவர்கள் காரணத்தையும் சூழலையும் தேடிக் கொண்டே இருப்பார்கள். அதுவே அவர்களின் போக்கு.
கடந்த காலத்தில் கனேடிய மண்ணில் நான் தேசப்பற்றுடன் செயற்பட்டும் போராடியும் வருகிறேன். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் நேர்கொண்ட வழியில் எனது பயணம் தொடரும்.
அத்துடன் விடுதலைக்கு எதிராக எமது வரலாற்றையும் புனிதங்களையும் கொச்சைப்படுத்தி அதில் இலாபம் காண முயல்பவர்கள் குறித்தும் சுட்டிக்காட்ட ஒரு ஊடகப் போராளியாக நான் என்றும் களப்பணி செய்வேன்.
அதனை எதிர்கொள்ள முடியாத சிலர், நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் நிகழ்வுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி எமது வளர்ச்சியை தடுக்க குறுக்கு வழி தேடுகின்றனர்.
அது ஒருபோதும் நிகழாது.
தேச விடுதலைமீதும் மாவீரர்கள்மீதும் எத்தகைய பற்று எனக்கு உள்ளது என்பதை எனது உறவுகள் அறிவார்கள். தாய் மண்ணுக்காகவும் தமிழர் கனவுக்காகவும் உழைப்பதே எங்கள் இலட்சியாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் எமது உழைப்பு மிக அவசியமானது.
இந்த நிலையில் பெருமுயற்சிகளின் மத்தியில் நீண்ட கால உழைப்பின் அடிப்படையில் எதிர்வருகின்ற செப்டம்பர் 28ஆம் நாளன்று இந்திய நட்சத்திரங்களான ராகுல் நம்பியார் மற்றும் ஜனனி பரத்வாஜ் ஆகியோர் பங்குபற்றும் ஈசி இன்டடைமன்ட் நைட் நிகழ்வுக்கு எனது உறவுகள் அனைவரதும் வருகையையும் ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளேன்.
இவ்வண்ணம்
ஊடகப் போராளி கிருபா பிள்ளை