சென்னை பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சிவகார்த்திகேயன், சோகத்தில் விஜய் சேதுபதி?
பூஜை விடுமுறையை டார்க்கெட் செய்து ரெமோ, றெக்க, தேவி ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்கள் ஒரே நாளில் மோதியது.
இதனால் இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது, படம் ரிலிஸ் ஆனதும், விமர்சன ரீதியாக தேவி படமே எல்லோரையும் கவர்ந்தது, ஆனால், பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது சிவகார்த்திகேயன் தான்.
ரெமோ சென்னை பாக்ஸ் ஆபிஸில் 3 வார முடிவில் ரூ 6.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, தேவி படம் ரூ 2.5 கோடி வசூல் செய்ய, றெக்க ரூ 1.7 கோடி தான் வசூல் செய்துள்ளது.
கடந்த முறை எதிர்நீச்சல்-சூதுகவ்வும் போட்டியில் விஜய் சேதுபதிக்கே அமோக ஆதரவு கிடைத்தது, இந்த முறை சறுக்கியது அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.