சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்
ஓர் காலகட்டத்தில் சென்னை தெருக்களில் பிச்சை எடுத்த ஓர் இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சென்னை வந்த ஜெயவேல் என்ற இளைஞர் வேலை ஏதும் கிடைக்காததால் வறுமையின் பொருட்டு தனது பெற்றோருடன் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
அப்போது தெருவோரம் வசிப்போரின் வாழ்க்கையை ஆவணப்படமாக பதிவு செய்ய வந்த உமா – முத்துராமன் தம்பதி ஜெயவேலை தத்தெடுத்து படிக்க வைத்துள்ளனர்.
அவர்கள் ஜெயவேலுவிற்கு கொடுத்த ஊக்கத்தால் நன்றாக படித்த ஜெயவேல் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றார்.
ஜெயவேலிற்கு மேற்படிப்பு படிக்க சில ஆர்வலர்கள் முன் வந்தனர். உலகத்தரம் வாய்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வில் தகுதிபெற்று அந்தப்பல்கலைக்கழகத்தில் கார்களின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பான பட்டப்படிப்பை முடித்தார்.
தற்போது இத்தாலியில் உள்ள டுரின் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வரும் ஜெயவேலின் படிப்பு செலவுக்காக உமா – முத்துராமன் தம்பதியினர் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். தான் தாய்நாடு திரும்பியதும் இந்த தம்பதியினருக்கு கடனை கொடுத்துவிட்டு தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் செய்வேன் என ஜெயவேல் கூறியுள்ளார்.