முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி அன்று தலைமைத்துவ செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சிறுவர்கள் விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் அப்போது தாக்குதலில் காயமடைந்த மாணவிகளினது கதைகளையும் உயிரிழந்த மாணவிகளின் வரலாறுகளையும் தாங்கிய நூல் ஒன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட குறித்த நூல் முள்ளிவாய்க்காலில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறுதி யுத்தத்தில் பின்னர் காணாமல்போன இந்த நூல் 9 வருடங்களின் பின்னர் கண்டுப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.