பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செக்குடியரசில் இன்று சனிக்கிழமை தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தியோகபூர்வ அரச கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நண்பகல் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (21) தலைநகர் ப்ராக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலை பீட கட்டிடத்தில் மாணவன் ஒருவனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 20 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மாணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
குறித்த தாக்குதலுக்கான காரணத்தை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழகத்தின் இசையியல் பிரிவின் தலைவரான லென்கா ஹ்லவ்கோவாவும் அடங்குவார்.
மேலும், மொழிபெயர்ப்பாளரும் ஃபின்னிஷ் இலக்கிய நிபுணர் ஜான் ட்லாஸ்க் மற்றும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பாக செக்குடியரசின் பிரதமர் பீட்ர் ஃபியாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த “கொடூரமான தாக்குதலால் ” நாடு அதிர்ச்சியடைந்துள்ளது. ஒருபுறம் கண்டனத்தை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது கடினம். மறுபுறம் கிறிஸ்துமஸுக்கு முன்னர் இந்த நாட்களில் நமது முழு சமூகம் வலி மற்றும் துக்கம் அனுபவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டை நடத்திய மாணவன் வேறொரு தந்தை கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
அத்தோடு, 15 ஆம் திகதி ப்ராக் புறநகரில் உள்ள ஒரு காட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மற்றும் அவரது இரண்டு மாத மகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபராவார்.
இந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஒரு தனி நபரால் துப்பாக்கியால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
1347 இல் நிறுவப்பட்ட சார்லஸ் பல்கலைக்கழகம் செக் குடியரசின் மிகப் பழமையானதும் மிகப்பெரிய பல்கலைக்கழகம். ஐரோப்பாவில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.