சூர்யா-அல்லு அர்ஜுன் நடிக்க ஞானவேல் ராஜா தயாரிக்கும் 2 புதிய படங்கள்
சூர்யா நடித்து, ஹரி டைரக்ஷனில், ‘எஸ் 3’ படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, அந்த படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார். இதையடுத்து அவர் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தயாரிக்கிறார். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார்.
இதற்கிடையில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ஒன்றையும் ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தை லிங்குசாமி டைரக்டு செய்கிறார். நேரடி தமிழ் படத்தில் நடிப்பது பற்றி அல்லு அர்ஜுன் கூறியதாவது:-
“நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். இந்த நகரை எனது தாய் வீடு போல உணர்கிறேன். தமிழ் நன்றாக தெரியும். தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இதற்காக 10 வருடங்கள் காத்திருந்தேன். ஆனாலும் நல்ல கதை அமையவில்லை. லிங்குசாமி சொன்ன கதை மிகவும் பிடித்தது. எனக்காகவே அந்த கதை உருவாக்கப்பட்டதுபோல் இருந்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். என்னை தமிழில் அறிமுகபடுத்தும்
ஞானவேல்ராஜாவுக்கு நன்றி.”

டைரக்டர் லிங்குசாமி கூறும்போது, “இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது. ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்த பிறகு இதன் படப்பிடிப்பை தொடங்குவேன். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.”