சூர்யாவின் 35வது படத்தின் டைட்டில் வெளியானது!
சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சூர்யாவின் பெற்றோர்களாக கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடிக்க உள்ளனர்.
சிறிது நேரத்துக்கு முன்பு தான் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்கள். தற்போது இப்படத்துக்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
நானும் ரவுடி தான் போலவே பக்கா கமர்ஷியல் படத்தை மீண்டும் எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கை தலைப்பிலேயே முதலே ஆரம்பித்துள்ளது.