சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும் விண்கலத்தை தயாரிக்கும் பணிகளை நாசா தீவிரப்படுத்தியுள்ளது. கார் அளவில் உருவாக்கப்பட இருக்கும் இந்த விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உதவும் என சொல்லப்படுகிறது. இதுவரை மனிதர்கள் உருவாக்கியதில் சூரியனுக்கு அருகில் செல்லும் முதல் விண்கலமாக இது இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். \’பார்க்கர் சோலார் பிராப்\’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் அடுத்த மாதம் அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு அதன் பணிகளை தொடங்கினாள் சூரியன் குறித்து இதுவரை கிடைத்திராத தகவல்கள் அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகில் சக்திவாந்த ராக்கெட்டுகளில் ஒன்றாக கருதப்படும் \’டெல்டா ஐவி ஹெவி\’ ராக்கெட் இந்த வினைகளத்தை சுமந்து செல்லவிருக்கிறது. சூரியனின் வெப்பத்தில் பொசுங்கி விடாத வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.