‘சூப்பர் கம்ப்யூட்டர்’ தயாரித்து அமெரிக்காவை முந்திய சீனா
அமெரிக்க தொழில்நுட்ப மின்றி சீனா அதிவேக ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ தயாரித்துள்ளது. சீனா அனைத்து துறை யிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் உலகிலேயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள் ளது.
அதுவும் அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘தி சன்வே தாய்ஹ§ லைட்’ என பெயரிடப்பட் டுள்ளது. இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அதிவே கம்ப்யூட்டரை விட இது 2 மடங்கு கூடுதல் வேகத் தில் செயல்படும் திறன் கொண்டது. இதற்கு முன் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் அமெரிக்காவின் ‘இன்டெல்’ நிறுவனத்தின் ‘சிப்ஸ்’களால உருவானது.
தற்போது தயாரிக்கப்பட் டுள்ள ‘தி சன்வே தாய்ஹூ லைட்’ அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் ‘கிளைமேட் மாடெலிங் அன்டு லைப் சயின்ஸ்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தபட உள்ளது. தற்போது இது தென் சீனாவின் ‘வுஸி’ நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் மையத்தில் நிறுவப் பட்டுள்ளது.
167 கம்ப்யூட்டர்களை உருவாக்கி உலக நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத் தில் உள்ளது. அமெரிக்கா 165 கம்ப்யூட்டர்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. பட்டியலில் இந்தியா 8-வது இடத்தை பிடித்துள்ளது. உலகில் உள்ள அதிவேக கம்ப்யூட்டர்களில் சீனாவில் 2 கம்ப்யூட்டர்கள் உள்ளன. அமெரிக்காவில் 4 கம்ப்யூட்டர்கள் இருக் கின்றன. மற்றவை ஜப்பான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியாவில் உள்ளன.
உயர்ரக தொழில்நுட்ப நாடுகளில் முதலிடம் பிடிக்க சீனா பணத்தை கொட்டி பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு சீனாவில் உலகிலேயே மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் உருவாக்க திட்டமிட்டுள்ளது.