குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன், சீஸ் வைத்து அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிக்கன் சீஸ் பால்ஸ் – தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ
முட்டை – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 1
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
கார்ன் பிளேக்ஸ் – 1 கப்
சோள மாவு – 1/2 கப்
சீஸ் – தேவைக்கு
பால் – 3 டேபிள் ஸ்பூன்
ரொட்டி – 1 துண்டு
உப்பு – ருசிக்கு
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை, மஞ்சள் கருவை தனித்தனியே எடுத்துக் கொள்ளவும்.
மிக்சியில், சிக்கன், மிளகாய் துாள், முட்டையின் மஞ்சள் கரு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, உருக்கிய வெண்ணெய், ரொட்டித் துண்டு சேர்த்து, அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு கையில் லேசாக எண்ணெய் தடவி, கொண்டு சிக்கன் மசாலாவில் சிறிய உருண்டையாக எடுத்து நடுவில் சீஸ் துண்டு வைத்து, சிறு உருண்டைகளாகப் பிடித்து, சோள மாவு, முட்டையின் வெள்ளைக் கரு, பொடித்த கார்ன் பிளேக்ஸ் இவற்றில் வரிசையாக தோய்த்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
உள்ளே சீஸ் இருப்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த ருசியான சிற்றுண்டி இதுவாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]