கர்நாடக முதல்வர் சித்தராமையா, மற்றும் உ.பி., முதல்வர் யோகிஆதித்யநாத்தின் டுவிட்டர் மோதலால் அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு மத்தியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளன. மேலும் தென்னிந்திய மாநிலத்தில் குறிப்பாக கர்நாடகாவில் முதல்முறையாக ஆட்சி அமைத்த பாஜ. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறது.தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உ.பி., முதல்வர் யோகிஆதித்யநாத் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
சாவுகளை குறைக்க உதவும்
இது குறித்து கருத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சித்தராமையா எங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் உங்களை நான் வரவேற்கிறேன். நீங்கள் இங்கு இருக்கும் போது இந்திரா கேண்டீன் மற்றும் ரேஷன் கடைக்கு சென்று வாருங்கள் அது உங்கள் மாநிலத்தில் பட்டினி சாவுகளை குறைக்க உதவும் என பதிவிட்டுள்ளார்.
அதிகளவில் தற்கொலை
இதற்கு டுவிட்டர் மூலம் பதில் அளித்துள்ள உ.பி., முதல்வர் உங்கள் அழைப்புக்கு நன்றி. உங்கள் ஆட்சியில் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கேள்விப்பட்டேன் என பதிவிட்டுள்ளார்.
இரு மாநிலமுதல்வர்களின் டுவிட்டர் கருத்துக்களால் கர்நாடக மாநில அரசியல் இப்போது இருந்தே சூடு பறக்க துவங்கி உள்ளது