சூடான காரிற்குள் ஒரு வயதிற்கும் குறைந்த குழந்தை. கண்ணாடியை நொருக்கி காப்பாற்றிய பொலிசர்.
கனடா-மார்க்கம் ஒன்ராறியோ. பிறந்து ஒரு வயதுகூட ஆகாத குழந்தையை கொஸ்ட்கோ கடைக்கு வெளியே சூடான காரிற்குள் வைத்து பூட்டிவிட்டு பொருட்களை வாங்க சென்று விட்டனர் பெற்றோர். இச்சம்பவத்தை கண்டவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர் .அங்கு வந்த யோர்க் பிராந்திய பொலிசார் யன்னல்கள் மூடப்பட்ட காரிற்குள் குழந்தை இருந்ததை கண்டனர். சம்பவம் செவ்வாய்கிழமை மாலை நடந்தது.
அதிகாரி ஒருவர் யன்னல் கண்ணாடியை நொருக்கி குழந்தையை காப்பாற்றினார்.45-நிமிடங்கள் வரை குழந்தை வெப்பம் நிறைந்த காரிற்குள் இருந்துள்ளதென தெரிவிக்கப்பட்டது.
வெளியே எடுத்த குழந்தையை அம்புலன்ஸ் ஒன்றிற்கு கொண்டு சென்று குளிரடைய செய்தனர்.
கடையை விட்டு வெளியே வந்த பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இப்போது Children’s Aid Society தலையிட்டுள்ளது. கவனிப்பாரற்று குழந்தையை விட்டு சென்றார்கள் என பெற்றோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22 பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.