சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் டென்னிஸிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிடை பட்டியலில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் இந்த வார இறுதியில் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 37.
ஒய்வு பெறுவது குறித்து மார்டினா ஹிங்கிஸ் கூறும்போது, “நான் டென்னிஸுக்கு அறிமுகமாகி 23 ஆண்டுகளாகிவிட்டன. தற்போது எனது மனம் வலிமையாக இருந்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை” என்றார்.