சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை தங்களின் வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக தெரிவித்து 2000க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக மனித உரிமைகள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் முதல்தடவையாக மனித உரிமைகளிற்கான ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நீதிமன்றங்களில் ஆறுவருடகாலமாக போராடி தீர்வு கிடைக்காத நிலையில் 2000க்கும் அதிகமான பெண்கள் ஐரோப்பிய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் காலநிலை சர்வதேச அளவை விட அதிகமான அளவில் அதிகரித்துவருகின்றது,அங்கு முன்னரை விட அதிகவெப்ப நாட்களை எதிர்கொள்ள முடிகின்றது.
70வயதான , தங்களை கிளைமேட் சீனியர்களின் கிளப் என அழைக்கும் பெண்களே நீதிமன்றம் சென்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் காலநிலை கொள்கை தங்கள் மனிதஉரிமைகள் உடல்நலம் மற்றும் உயிர்வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கின்றது என இந்த பெண்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் தங்கள் குற்றச்சாட்டிற்கு ஆதரவாக தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
பசுமை இல்ல வாயுக்களின் அளவை கட்டுப்படுத்தவேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு உத்தரவிடவேண்டும் என இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.”’
காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவு வெப்பநிலை காணப்படுகின்றது எங்களை போன்ற வயது முதிர்ந்த பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றோம் ஏனைய காரணங்களை விட வெப்ப அதிகரிப்பால் அவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என எலிசபெத் ஸ்டேர்ன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.