சுவாதியின் வழக்கில் புதிய திருப்பம்: வீடியோ ஆதாரம் சிக்கியது
சுவாதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது போன்ற வீடியோ பதிவுகள் பொலிசுக்கு கிடைத்துள்ளன.
கடந்த 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணம் தொடர்பாக புதிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.
அதாவது அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன.
அந்த வீடியோ பதிவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அந்த இருசக்கர வாகனம் சூளை நெடுஞ்சாலை வழியாக செல்கிறது.
இதன்பிறகு அந்த நபர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அதைப்பார்த்த பொலிசார், அந்த இருசக்கர வாகன நம்பர், அதில் செல்பவரின் முகம் தெளிவாக உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
உறுதியான தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில் குற்றவாளியை விரைவில் கைது செய்யலாம் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவாதியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.கள், அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.கள், இன்கம்மிங், அவுட் கோயிங் கால்கள் குறித்த விவரங்களை சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.
அதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விவரங்கள் உள்ளதால் அதிலிருந்து முக்கியமான தகவல்களை சேகரிக்க குறைந்தபட்சம் 10 நாட்களாகும் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிவடைந்துள்ளதால் பொலிசார் செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளனர்.
இதற்கிடையே சுவாதியின் மொபைல் எண் கொண்ட மற்றொரு சிம்மை தயாரித்து அதன் மூலம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/65175.html#sthash.bVUU3SGA.dpuf