விளையாட்டுத்துறையின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்பொழுது எமது நாட்டில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.