சுரங்கபாதை ரயிலில் தீ. பயணிகள் வெளியேற்றம்.
கனடா-ரொறொன்ரோ சுரங்க பாதை ரயில் ஒன்றில் புதன்கிழமை காலை தீயினால் புகை ஏற்பட்டதால் வெளியேற்றம் செய்யப்பட்டது. ரயில் பெட்டி ஒன்றிற்குள் தீ பிடித்துள்ளது. டுபொன்ட் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.குறிப்பிட்ட பெட்டிக்குள் இருந்த 21 பயணிகளும் இரண்டு பணிகுழுவினரும் வெளியேற்றப்பட்டனர்.
எவரும் காயப்படவில்லை.
வழக்கமான பராமரிப்புகளின் பின்னர் இரு உபகரணங்களள் மூடப்படாத நிலையில் இருந்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.
3மணித்தியாலங்களிற்கும் மேலான தாமதம் ஏற்பட்டது. ஷட்டில் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.