சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியில் உறுப்பினர் வழங்கியமையை வன்மையாக கண்டிப்பதாகவும் சுமந்திரனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை களுவாஞ்சிகுடியில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலே வடகிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டவர்களில் கிழக்கை சேர்ந்த அனேகமானவர்கள் எமது கட்சி சார்ந்து வெற்றி பெற்றிருக்கின்றார்கள் கிழக்கு மாகாணத்தில்தான் பல் சமயங்கள் சார்ந்த கட்டமைப்புக்குள் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கமிஷன் வியாபாரங்கள்
கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர்கள் இருந்தும்கூட எனது தமிழ் மக்கள் எமது வேட்பாளர்களின் செயற்பாடுகளின் ஊடாக அனைவரும் களத்தில் நின்று செயற்பட்டது நிமித்தம் நமது மக்கள் சகல விடையங்களையும் மறந்து வீட்டுக்கே வாக்களிக்க வேண்டும் என்பதன் நிமித்தம் அதிகூடிய வாக்குகளை தமிழரசு கட்சிக்கு வழங்கியதற்காக எனது மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களிலே எமது பகுதிகளில் கொள்ளைகள், மண் கொள்ளை, ஒப்பந்தங்களில் மோசடி, இவ்வாறு பல பல கமிஷன் வியாபாரங்கள் கடந்த கால அரசின் காலத்திலே நடைபெற்றதை மக்கள் அறிவார்கள்.
அதன் நிமிர்த்தம் அதன் மனசாட்சியின் அடிப்படையில் எப்பொழுதும் எனக்குத் தேவை நீதியான நியாயமான எமது உரிமைகளை தட்டிக் கேட்கின்ற பரிசுத்தமான கட்சி என்ற அடிப்படையில் தமிழச்சி கட்சிதான் என்பதை உணர்ந்து கிழக்கு மாகாணத்திலே அதிகளவு ஆசனங்களை எமது கட்சி கைப்பற்ற கூடியதாக இருந்தது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தலைமைகள் விட்ட பிழை காரணமாக மக்கள் அவர்கள் மேலுள்ள அதிருப்தி காரணமாக எமது கட்சியை தள்ளிவிட்டு தேசியத்தின் பால் இருக்கின்ற வேறு கட்சிகளையும் மக்கள் உதறித் தள்ளிவிட்டு படித்த மக்கள் உள்ள வட மாநிலத்திலேயே மிகவும் கவலை அடைகின்ற விடயம் ஒரு சிங்கள தேசிய கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி அதிக அளவு அங்கத்தவர்களை அக்கட்சியில் வட மாகாணத்தில் இருந்து பெறுவதற்கு அந்த மக்கள் வழி சமைத்து இருக்கின்றார்கள்.
அந்த சம்பவங்களை நாங்கள் நினைத்துப் பார்க்கின்ற போது நிச்சயமாக அது அவர்களின் முயற்சி அல்ல எங்களுடைய வீழ்ச்சியாக வைத்தான் நான் இதனை கருதுகின்றேன் இதற்கான காரணம் எமது தலைமைகளிடையே உள்ள நீதியான நியாயமான தீர்மானங்கள் எடுப்பதில் உள்ள ஆட்களுக்கு இடையில் உள்ள வெட்டுக் குத்துகள் அதிகம் நடைபெற்றதன் காரணமாகத்தான் மக்கள் திணறி அடித்து தமிழரசுக் கட்சிக்கு வாக்களிப்பதைவிட வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில் மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
எமது கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினரைத் தெரிவு செய்த விவகாரத்தில் கட்சியைச் சேர்ந்தவர்களும், மக்களும், மிகவும் அதிர்ச்சியுடன் இருக்கின்றார்கள், எமது தமிழரசு கட்சியின் உயர்மட்ட அரசியல் குழு எடுத்த இந்த தீர்மானம் பிழையான ஒரு தீர்மானம் என்பதைத்தான் நான் கருதுகின்றேன் அவ்வாறுதான் எமது மக்களும் கருதுகின்றார்கள்.
தேசியப் பட்டியல்
ஏனெனில் வடமாகணத்திலே வவுனிய மாவட்டத்திற்கு அந்த தேசியப் பட்டியல் உறுப்பினரை வழங்க வேண்டுமாக இருந்தால் அதற்கு நாங்கள் மறுக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத மாவட்டத்திற்கு அந்த தேசியப்பட்டியல் உறுப்பினரை வழங்குவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஏனெனில் எமது செயற்பாடுகளை அங்கு சீர் பெற்று செய்யக்கூடிய ஒரு மக்கள் பிரதிநிதி தேவை என்ற அடிப்படையில் குறிப்பாக வவுனியா மற்றும் மன்னார் போன்ற பகுதிகளுக்கு அதனை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
ஆனால் எனது கட்சி மகளிருக்கான ஒதுக்கீடு தொடர்பிலும், வாலிபர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பிலும், கூறி வருகின்றது ஆனாலும் திருமதி ரஞ்சினி கனகராசா என்பவருக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் வருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
வடக்கில் நான்கு பெண்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டடிருந்தார்கள், இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கவில்லை, மன்னார் மற்றும் வவுனியாவைச் சேரந்த இரு பெண் சட்டத்தரணிகள் போட்டியிட்டிருந்தார்கள், இவர்கள் அனைவரையும் புறந்தள்ளிவிட்டு சத்தியலிங்கத்திற்க வழங்கியுள்ளார்கள்.
எனவே எனது கட்சி எந்த அடிப்படையில் சக்தியலிங்கம் அவர்களுக்கு தேசிய பட்டியல் உறுப்பினர் வழங்கி இருக்கின்றது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் எனவே இந்த விதத்தில் கட்சியும் கட்சியின் தலைமை பீடமும் எடுத்த இந்த முடிவை நாமும் மக்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாகரன் அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளார் அவரும் இந்த தேசியப்பட்டியில் உறுப்பினர் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார் ஆனால் உயர்மட்ட குழு மீண்டும் சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதற்காகதான் இந்த முயற்சியை எடுத்து சத்தியலிங்கத்துக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினரை வழங்கி உள்ளதாக நான் கருதுகின்றேன்.
மக்கள் மீது அக்கறை
அவ்வாறு அவர்கள் சிந்தித்து எடுத்த முடிவு இன்னும் எமது தமிழச்சி கட்சியை படு குழிக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கையாகதான் அமையும் என்பதை நான் கருதுகின்றேன் அவ்வாறான முடிவுகள் அவர்கள் எடுத்திருந்தால் அது கண்டிக்கத்தக்க வேண்டிய விடயமாகும்.
ஏற்கனவே வடமாகணத்தில் தமிழரசு கட்சி வீழ்ச்சி பெற்றுள்ளதற்கு காரணமானவர்கள் யார் என்பதை தெரிந்தும் கூட தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மீண்டும் சுமந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என பிரஸ்தாபித்திருந்ததாகவும், நான் அறிகின்றேன் அவ்வாறு சுமந்திரனுக்காக வேண்டி பாடுபட்டு அவரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டுவர வேண்டும் என நினைத்தால் அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறையில்லாதவர்களாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்களாகவுமே நான் பார்க்கிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை மீழுருவாக்கம் செய்வதென்பது தவறி போன விடயமாகவே தான் நான் கருதுகின்றேன் ஏனெனில் கடந்த காலங்களில் ஒற்றுமையாக ஒருமித்து தேசியத்துடன் இருக்கின்ற கட்சிகளில் அனைத்தையும் ஒன்றிணைத்து சென்றதன் ஊடாகத்தான் எமது மக்களுக்கான விடிவை தேடலாம் என்ற அடிப்படையில் தலைவர்களுடன் நாம் கலந்துரையாடினோம் இருந்த போதிலும் அந்த தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை சிலவேளைகள் எதிர்காலத்தில் சில பின்னடைவுகளைக் கொண்டுவரக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன.
தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் நீதியான நியாயமான சகல சமூகங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நான் முன்வைப்பேன் என ஜனாதிபதி அவர்கள் கடந்த கூட்டங்களில் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி அவர்களின் நடவடிக்கைகளை நாங்கள் உற்று நோக்குகின்ற போது சாதாரண ஒரு பிரஜையை போல் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொள்வதையிட்டும், அவரின் கடந்த கால விடயங்களை பார்த்தும் சரியான தீர்வுகளை எடுக்கலாம் அவ்வாறு எடுப்பாரா இருந்தால் அவர் எமது தமிழ் மக்களின் மனங்களிலே என்றும் இடம்பெற்றவராக கருதப்படுவார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என ஒரு செய்தியை பார்த்தேன் அவ்வாறு சில சலுகைகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதனால்தான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனவே சேவை செய்யப் போனவர்கள் சேவை செய்தால் இவ்வாறாக பிரச்சனைகள் வராது.
நாடாளுமன்றத் தேர்தலில் எனது கட்சியில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் அரசாங்கத்துடன் இணக்க ஆட்சி நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஒரு சில வேட்பாளர்கள் கூறியிருந்தார்கள் அவர்கள் சில எதிர்பார்ப்புகளை எதிர்பார்த்து தாங்கள் வெற்றி பெற்றால் தேசிய அரசியலில் இணையலாம் என்ற ஒரு பேராசையில் தெரிவித்திருக்கலாம். ஆனால் கடவுளின் சித்தம் காரணமாக அறுதிப் பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்ற காரணத்தினால் ஏனைய கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படாது.
நாடாளுமன்றத் தேர்தல்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி சார்பில் வேட்பாளர்கள் தெரிவிலும் அநியாயங்கள் நடைபெற்றது உண்டு அதை மறப்பதற்கு இல்லை எமது மட்டக்களப்பு மாவட்டத்தில்கூட ஒரு பெண் வேட்பாளரை நிறுவ நிறுத்துவதற்குகூட மகளில் அணிச் செயலாளர் விண்ணப்பித்திருந்தார் அவருடைய விண்ணப்பபம், ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா என்பது தொடர்பில் இட்டவரை தெரிவிக்கப்படவில்லை நானும் எனது வண்ணப்பத்தை போட்டியிடுவதற்காக சமத்து பெற்றிருந்தேன் எனக்கும் அதுதொடர்பில் இதுவரையில் எதுவித பதிலும் அறிவிக்கப்படவில்லை.
தெரிவிக் குழுவில் இருந்தவர்கள்தான் தேர்தலில் போட்டியிடுபவர்களாகவே இருந்தார்கள் அந்த கலாசாரம் எது கட்சியிலிருந்து இது ஒரு நியாயத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும். இந்த விடயங்களும்தான் யாழ்ப்பாணத்தில் தாக்கம் செலுத்தி இருக்கின்றன. அதிகமானோர் ஒவ்வொரு கட்சிகளின் தாவி வாக்குகளை பிரித்திருக்கின்றார்கள் இதுதான் உண்மை. எனவே போட்டியிட்டவர்களில் தேசியத்தின் பால் இருக்கின்ற நபர்களையேதான் மக்கள் தெரிவு செய்து இருக்கின்றார்கள்.
எனது கட்சி சார்ந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடையே பாராளுமன்ற பிரதம கொறடாவையோ பாராளுமன்ற தெரிவு குழுவின் தலைவரையோ, தெரிவு செய்வதற்கு எமது கட்சியின் அரசியல் குழுவிற்கு அதிகாரம் இல்லை.
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்துதான் அந்த பிரதம கொறடாவையும், நாடாளுமன்ற குழுக்களின் தலைவரையும் தெரிவு செய்ய வேண்டும் என்பது வரையறை. அதையும் மீறி தாங்களாகவே முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரிய பதவிகளுக்கு நபர்களைத் தெரிவு செய்துள்ளார்கள்.
அதற்கு மேலாக கட்சியில் அதிகளவு வாக்குகளை பெற்ற நபர்கள் இருக்கும் போதும் அவர்களை விடுத்து தேசியப்பட்டியிலேயே தெரிவு செய்யப்பட்ட நபரைதான் பிரதம கொறடாவாக நியமித்திருக்கின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளும்தான் மக்களை கிலேசத்திற்கு கொண்டு வருகின்ற செயற்பாடாக அமைகின்றன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்தான் அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சி சார்ந்திருக்கின்றார்கள் அவர்களில் ஒருவரைக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை அவ்வாறாயின் மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியவர்களின் நிலை என்ன? இதனை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது அரசியல் குழுவின் பக்கம் கேள்வி எழுப்ப வேண்டிய கடப்பாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.