காலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடந்த ஒரு மணித்தியாளத்திற்கு முன்னர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென கடல் நீர் உள்வாங்கியுள்ளதை நபர் ஒருவர் தனது தொலைபேசியில் காணொளியெடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த அதிர்விற்கும், கடலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் தொடர்புகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
எனினும் நில அதிர்வின் பின்னர் காலியில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு தகவல் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் நில அதிர்வின் பின்னர் கடலில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.