இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுதந்திர ஊடக நிலையம் நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இல. 65, ஆனந்த ராஜகருணா மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரியில் இந்த சுதந்திர ஊடக நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் மேற்கொள்ளவுள்ள ஊடகப் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இது தொடர்பான விபரங்கள் அடங்கிய Nidahasugayak.com இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, எஸ்.பீ.திஸாநாயக்க, ஏ.எச்.எம்.பௌஸி, மஹிந்த அமரவீர, சந்திம வீரக்கொடி, திலங்க சுமத்திபால, அனுராத ஜயரத்ன உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.