வேறு கட்சிகளை ஊக்குவிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று -05- நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் மொட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனவும் அது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்டதொரு கட்சி எனவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அந்தக் கட்சி தம்முடன் இணையாவிட்டாலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கட்சியொன்றுக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பூர்வ தலைவர் எனவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.