இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘30’ ஆண்டுகள் எனக் கூறிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தமது உரையின் ஆரம்பத்தில் மதத்தலைவர்கள், சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரமுகர்களை வரவேற்ற அரச தலைவர் மைத்திரி, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை கிடைக்கப்பெற்று 30 ஆண்டுகளாகின்றன. அந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தையே இன்று நினைவுகூருகின்றோம்’ என்று கூறினார்.
70 ஆண்டுகள் எனக் கூறவேண்டியதை 30 ஆண்டுகள் என்று அரச தலைவர் மைத்திரி பேசியதை சுட்டிக்காட்டியே விமர்சனங்கள் எழுந்துள்ளன.