தமிழ்சினிமாவில் வருடத்துக்கு நான்கைந்து படங்களை இயக்கியவர்கள் என்று கடந்த காலங்களில் பெயரெடுத்த ராமநாராயணன் பாணியில் அடுத்தடுத்து படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார் சுசீந்திரன்.
ஜீனியஸ்’, ‘ஏஞ்சலினா’ என இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன், இப்போது ‘சாம்பியன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த படத்தை அடுத்து பெண்கள் கபடியை பின்னணியாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன். சசிகுமார் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய முதல் படமான ‘வெண்ணிலா கபடிக் குழு’ ஆண்கள் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இப்போது பெண்கள் கபடி விளையாட்டை கையிலெடுக்க இருக்கிறார்.