கூட்டு அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று வெளியேறி மகிந்த அணியுடன் இணையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது இதனால்கூட்டு அரசு உடையும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவுடன், சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சி அமைக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகின்றபோதும், அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு போதிய பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கூட்டு அரசிலிருந்து சுசில் பிரேமஜயந்தவுடன் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணி பக்கம் தாவலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.