பொதுவான தொழில்நுட்ப கட்டமைப்பின் மூலம், தொழில்நுட்ப பொருட்களை உருவாக்குவதையும் கட்டுப்படுத்துவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளால் இந்தக் கருவிகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இயங்குதன்மை, தரவு தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கான தரநிலைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் வைத்தியர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ஒன்றாக ஒரு ஆரோக்கியத்தை உருவாக்குதல் – சுகாதார சமத்துவத்தை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சிறப்புரைகள் இடம்பெற்றன. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இணையமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் பங்கேற்றுள்ளவர்களுக்கு நன்றி. இந்தியாவின் ஜி20 சுகாதார நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பூமி – ஒரு குடும்பம்- ஒரு எதிர்காலம் என்ற நோக்கில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை கவனத்தில் கொண்டு செயல்படுகிறோம். சுகாதார துறைசார் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
எனவே புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இணைக்கும் வகையில் பொதுமக்களுக்கு சுகாதார சேவை வழங்குவது மீண்டும் சீரமைக்கப்பட வேண்டிய நேரம் இது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மருத்துவ சாதன உற்பத்தி முதலியன சுகாதார துறையில் மாற்றங்களை மேம்படுத்தும் ஒரு முழுமையான சுகாதார சூழலை உருவாக்க உதவும் என்றார்.