2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும் நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.