வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதிநிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிய நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் ஊழியர்களின் எண்ணிகையினை அதிகமாக அழைத்து செயற்பட்ட இரண்டிற்கும் மேற்பட்ட பிரபல நிதி நிறுவனங்கள் சுகாதார பிரிவினரால்
தனிமைப்படுத்தப்பட்டது.
இதேவேளை கிராமப்புற பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பலசரக்கு விற்பனை நிலையங்களும் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ், காவற்துறை பொறுப்பதிகாரி மானவடு மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.