சீன நாட்டவர்கள் கனடாவில் வீடுகள் வாங்குவதன் முக்கிய காரணம்?
கனடிய வீட்டு சந்தையில் சீனாவின் வெளிநாட்டு வீடு வாங்குபவர்கள் நுழைவதன் பிரதான காரணம் முதலீடல்ல கல்வி காரணம் என தெரிய வந்துள்ளது. பிரபல்யமான உலகளாவிய ரியல் எஸ்டேட் பட்டியலிடல் இணைய தளத்தின்தரவு மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் 46சதவிகிதம், வன்கூவரில் 44சதவிகிதம், ரொறொன்ரோவில் 41சதவிகிதம் மற்றும் கல்கரியில் 9சதவிகிதம்- கூறப்படும் காரணங்களில் மிக அதிகமாக கருதப்படுவது கல்வி நோக்கம் கொண்டதென கூறபட்டுள்ளது.
இரண்டாவது மிக பொதுவான உந்து சக்தியாக வீடு வாங்குபவர்களது ஆர்வம் “சொந்த பாவனை”. வீட்டை இரண்டாவது அல்லது மூன்றாவது சொத்தாக உபயோகிக்கலாம் என்பதாகும். இந்த அடிப்படையில் கல்கரியில் வீடு வாங்குவது 62சதவிகிதமாக உள்ளது.
சர்வதேச வீடு வாங்கும் நாடுகளில் கனடா மூன்றாவது இடத்தில உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யு.எஸ். முதலாம் இடத்திலும் அவுஸ்ரேலியா இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றது.