இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (13) இடம்பெற்றது.
சீனத் தூதரகத்தில் நட்பு ரீதியாக இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் பரஸ்பரம் ஆர்முள்ள விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து உதவலாம் என இந்தச் சந்திப்பு குறித்து சீன தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.