சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவர் இன்று உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சீனாவில் ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாதென்ற கட்டுப்பாட்டை அண்மையில் தேசிய மக்கள் காங்கிரஸ் தளர்த்திய நிலையில், சீன ஜனாதிபதியொருவர் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்தது.
இதன் மூலம் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில், தலைநகர் பீஜிங்கில் சீன ஸி ஜின்பிங் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.