2019இல் சீன அதிகாரிகளால் குறிப்பிடப்படாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திபெத்திய எழுத்தாளர் ஒருவர் இன்னமும் நீதிமன்ற விசாரணைகளுக்காக முற்படுத்தப்படவில்லை.
தி லாடன் என்ற புனைப் பெயரில் செயற்படும் லோப்சாங் லுண்டப், என்பவர் 2019 ஜூனில் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அவர் சீனாவின் மேற்குப் பகுதியான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டூவில் உள்ள ஒரு தனியார் கலாசார கல்வி மையத்தில் பணிபுரிந்து வந்ததாக ரேடியோ ஃப்ரீ ஆசியா வெளிப்படுத்தியது.
‘கலாசார மையத்தின் உரிமையாளரிடம் அவர் பயன்படுத்தும் கற்பித்தல் பொருட்கள் தொடர்பாக யாரோ ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டார்’ என்று ரேடியோ ஃப்ரீ ஆசியாவிடம் குறித்த கைது தொடர்பான மூலம் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டது. எனினும் குறித்த மூலத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளிப்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
‘லுண்டப் நட்புடன் பழகக்கூடிய ஒரு நபர். அத்துடன் அவர் பலரால் அறியப்பட்டவர். அவர் விரைவில் விடுக்கப்படுவார் என்பதால் அவர் பற்றி அதிகமான தகவல்களை வெளிப்படுத்துவதை அவரது நண்பர்கள் தவிர்த்து விட்டனர் என்று குறித்த மூலம் தெரிவித்தததாக ரேடியோ ஃப்ரீ ஆசியா மேலும் குறிப்பிட்டது
ஆனால் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னரான எவ்விதமான தகவல்களும் இன்னமும் இல்லை. அவரைப்பற்றி எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் பதிவாகவில்லை. நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை. அத்துடன் அவரைச் சந்திப்பதற்கு எவருக்கும் அனுமதி அளிக்கப்படவுமில்லை.
அவர், சிச்சுவானின் கோலாக்கில் வசித்ததோடு தன்னாட்சி பகுதியான திபெத்தின் பெமா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவராக இருக்கின்றார்.
அவர் தனது 11 வயதில் சிச்சுவானின் லாரங் கார் திபெத்திய பௌத்த கற்கை நிலையத்தில் கல்வி கற்றார். அந்த கற்கை நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கான குடியுரிமைபெற்றிருந்தவர்கள் உள்ளடங்கலாக துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சீன அதிகாரிகளால் பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தனது 20வயதுகளின் பிற்பகுதியில் திபெத்தின் பிராந்திய தலைநகர் லாசாவில் உள்ள ட்ரெபங் மற்றும் சேரா மடங்களில் பௌத்த மதத்தை கற்பித்து வந்த லுண்டப் தொடர்ச்சியான காலங்களில் திபெத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்தார்,
பின்னர் 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கின் கொள்கைகள் மற்றும் திபெத்திய பகுதிகளில் அதன் ஆட்சிக்கு எதிராக பிராந்திய அளவில் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் குறித்த நூல்களை எழுதி வெளியிட்டார்.
2020 டிசம்பர் 4,ஆம் திகதியன்று லுண்டூப்பின் குடும்பத்தினர் சீன அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டனர், அவருடைய வழக்கு தொடர்பாக வாதவிவாதங்களுக்காக வரவழைக்கப்பட்டதாக சீன அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவருடைய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பதை மட்டுமே அவர்களுக்கு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதனைவிட அவரை சந்திப்பதற்கு கூட குடும்பத்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
லுண்டப் திருமணமானவர். அருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிக்க, சீன அரசாங்கம் 1950 இல் திபெத்தை ஆக்கிரமித்தது, அதன் பின்னர் இப்பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றது, 98 சதவீதமான பௌத்த மடங்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை அடையாளம் தெரியாதாக்கியது.
திபெத்துக்கு எதிராக சீனா ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தி வரும் அதே அடக்குமுறை தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, சுமார் 500,000 திபெத்தியர்கள் இப்போது தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டில் சீனா திபெத்திய பகுதிகளைத் தாக்கியமைக்கு எதிராக திபெத் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தது. இதனால் திபெத்திய தேசிய அடையாளத்தையும் கலாசாரத்தையும் ஊக்குவிக்கும் எழுத்தாளர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் சீன அதிகாரிகளால் அடிக்கடி தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கின்றது.
தகவல்கள்: ஏ.என்.ஐ.