சீன கப்பலின் இலங்கை விஜயம் குறித்து வெளியாகியுள்ள கரிசனைகளை இலங்கை நிராகரித்துள்ளது.
கப்பலின் இலங்கை விஜயம் குறித்து நேற்று அமைச்சரவை ஆராய்ந்தது என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அந்த கப்பல்தரித்துநிற்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் முன்னொருபோதும் இல்லாத பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் இந்தியாவும் சீனாவும் எங்களிற்கு உதவியுள்ளன என தெரிவித்துள்ள பந்துல குணவர்த்தன அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இந்த விவகாரத்திற்கு இராஜதந்திர தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்