சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது என டைம்ஸ்ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைக்க தவறியுள்ளதை தொடர்ந்தே இலங்கை கப்பலிற்கான அனுமதியை வழங்கியுள்ளது என டைம்ஸ்ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை ஜனாதிபதியை சந்தித்தவேளை அமெரிக்க தூதுவர் கப்பல் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளார்.
கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உறுதியான காரணங்களை முன்வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக டைம்ஸ்ஒன்லைன் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை இந்திய இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதேசெய்தியை தெரிவித்துள்ளார்.
இருதரப்பும் உறுதியான காரணங்களை வழங்கதவறியுள்ளதை தொடர்ந்து இலங்கை கப்பலிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கப்பல் விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலையிடியாக மாறியுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து கப்பல் 16 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும்.
முதலி;ல் கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழையும் என திட்டமிடப்பட்டிருந்தது,எனினும் இந்தியா தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கரிசனை வெளியிட்டதை தொடர்ந்து இலங்கை கப்பலிற்கான அனுமதியை தாமதித்திருந்தது.