சீன உணவகங்களுக்கு பாலாமை மற்றும் கல் ஆமைகளை விநியோகித்து வந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் மணல்தீவு பிரதேசத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் ஆமைகளை எடுத்துச் சென்ற போது புத்தளம் பொலிஸ் பிரிவின் விஷப் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸாரினால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணல்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பிடிக்கப்படும் ஆமைகள் சீன உணவகங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.