சமீபகாலமாக இந்திய படங்கள் சீனாவில் அதிகளவில் ரிலீஸாகி வருகின்றன. பிகே., தங்கல், பாகுபலி போன்ற படங்களை தொடர்ந்து சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படமும் ரிலீஸாக உள்ளது. கபீர்கான் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது. இந்நிலையில் பஜ்ரங்கி பைஜான் படம் வருகிற மார்ச் 2-ம் தேதி ரிலீஸாக உள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து சீனாவில் இப்படம் வெளியாக உள்ளது. பிகே., தங்கல் படங்கள் சீனாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பட்டையை கிளப்பியது போன்று பஜ்ரங்கி பைஜான் படமும் கிளப்புமா என்பது மார்ச் 2-க்கு பிறகு தெரிய வரும்.