சீனாவில் பேய்மழை: 112 பேர் பலி.. 72 பேரை காணவில்லை!
சீனாவில் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் 112 பேர் உயிரிழந்துள்ளனர், 72 பேர் காணாமல் போயுள்ளனர்.
சமீபகாலமாக சீனாவின் வடக்கு பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஹூனன் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதனால் விமான சேவைகளும், ரயில் சேவைகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் 100-க்கும் அதிகமானோர் மழையால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். பல்வேறு இடங்களில் பாலங்கள் உடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. மின் விநியோகம், செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி அளவுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு அதிகரித்து வருவதால் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.